Your Monthly Payout Options

需采取的行动:决定您的每月入息

 

我们尚未收到您启动每月入息的指示。

 

据我们之前通知,您可在65岁生日月份开始,终身领取每月入息。请浏览cpf.gov.sg/reaching65以了解更多有关您的选择的信息,并阅读以下资料以了解您的公积金户头在未来几个月将会出现什么情况以及您需要做些什么。

 

在您开始领取每月入息之前

开始领取每月入息的前一周

OA存款将转入RA,至达FRS 为止

 

我们将把您的OA存款转入您的RA,并以FRS为顶额。这将有助您获得更高的每月入息。如果您已用现金填补FRS达顶额,我们不会自动将您的OA存款转入RA,但您可以指示我们这样做,以领取更高的每月入息。

 

从RA中扣除保费

 

我们将从您的RA中扣除公积金终身入息计划的保费。这些保费将持续赚取利息,并纳入您的每月入息中。

我需要做什么

 

您可随时登录我们的网站cpf.gov.sg/payout,使用“规划我的每月入息”(Plan my monthly payouts)服务,查看您的预计每月入息金额、指示我们开始支付您的每月入息,以及确认您每月入息进账的银行户口资料。您也可以通过这项服务决定是否要:

增加您的每月入息

您可通过cpf.gov.sg/payout网站上的“规划我的每月入息”(Plan my monthly payouts)服务,选择不立即提取您的公积金存款来应急, 以保留更多存款来增加您的每月入息。

 

欲知更多有关提取公积金存款以应急的详情,请登录cpf.gov.sg/withdrawalpage。如果您不需要立即提取公积金,并希望关闭线上提取公积金的功能,请登录cpf.gov.sg/adjustlimitfaq,了解如何开启公积金提款锁功能。

延后领取每月入息

如果您不打算在65岁开始领取您的每月入息,您可以延后。每延后一年,您的每月入息金额将增加最高达7%。

请您在65岁生日前一个月的15号之内,通过cpf.gov.sg/payout网站上的 “规划我的每月入息”(Plan my monthly payouts)服务提交您的申请。例如,您的65岁生日月份是2月,您必须在1月15日之内提交申请。

 

如果您近期已向我们指示关于您每月入息的决定,请忽略此通知。

 

若您需要进一步咨询,请登录cpf.gov.sg/membercontactus与我们联系。

Tindakan yang diperlukan: Tentukan pembayaran bulanan anda

 

Kami mendapati bahawa anda belum lagi mengarahkan kami berkenaan keputusan pembayaran bulanan anda.

 

Seperti yang dimaklumkan sebelum ini, anda akan menerima pembayaran bulanan anda bermula dari bulan hari lahir anda yang ke-65 sepanjang hayat anda. Sila lungsuri cpf.gov.sg/reaching65 untuk maklumat lanjut mengenai pilihan-pilihan yang anda ada. Teruskan membaca untuk mengetahui apa yang akan berlaku kepada akaun CPF anda pada bulan-bulan akan datang dan apa yang anda perlu lakukan.

 

Sebelum pembayaran anda bermula

1 minggu sebelum pembayaran bermula

Pemindahan simpanan OA untuk memenuhi FRS

 

Kami akan memindahkan simpanan OA anda ke RA anda sehingga FRS. Ini akan membantu anda menerima pembayaran bulanan yang lebih tinggi. Jika anda telah memenuhi FRS anda secara tunai, kami tidak akan memindahkan simpanan OA anda secara automatik ke RA, tetapi anda boleh mengarahkan kami berbuat demikian untuk menerima pembayaran bulanan yang lebih tinggi.

 

Potongan premium daripada RA anda

 

Kami akan memotong premium CPF LIFE anda daripada RA anda. Premium anda akan terus memperoleh faedah dan faedah yang diperoleh akan diambil kira dalam pembayaran bulanan anda.

Apa yang perlu dilakukan

 

Gunakan khidmat “Rancang pembayaran bulanan saya” dalam talian kami (di cpf.gov.sg/payout) sekarang untuk melihat anggaran pembayaran anda dan mengesahkan butiran akaun bank anda bagi tujuan menerima pembayaran. Anda juga boleh menggunakan khidmat ini untuk memutuskan jika anda ingin:

Tingkatkan pembayaran anda

Khidmat “Rancang pembayaran bulanan saya” (di cpf.gov.sg/payout) membolehkan anda meningkatkan pembayaran bulanan anda dengan mengetepikan lebih banyak simpanan CPF untuk pembayaran daripada mengeluarkannya bagi keperluan segera.

 

Untuk mengetahui lebih lanjut tentang pengeluaran CPF bagi keperluan segera, lawati cpf.gov.sg/withdrawalpage. Jika anda tidak perlu mengeluarkannya dengan segera dan ingin menghentikan pengeluaran CPF dalam talian, ketahui cara anda boleh mengaktifkan kunci Pengeluaran CPF di cpf.gov.sg/adjustlimitfaq.

Tangguhkan pembayaran anda Jika anda memilih untuk tidak memulakan pembayaran anda apabila anda mencapai usia 65 tahun, anda boleh menggunakan khidmat “Rancang pembayaran bulanan saya” (di cpf.gov.sg/payout) untuk mengarahkan kami memulakan pembayaran anda kemudian. Pembayaran bulanan akan meningkat sehingga 7% bagi setiap tahun yang anda tangguhkan.

Sila lengkapkan permohonan anda melalui khidmat “Rancang pembayaran bulanan saya” (di cpf.gov.sg/payout) selewat-lewatnya pada 15hb, sebulan sebelum anda mencapai usia 65 tahun. Contohnya, memohon selewat-lewatnya pada 15 Januari jika hari lahir anda yang ke-65 jatuh pada bulan Februari.

 

Sila abaikan pemberitahuan ini jika baru-baru ini anda telah pun mengarahkan kami berkenaan keputusan pembayaran anda.

 

Jika anda memerlukan penjelasan, sila lawati cpf.gov.sg/membercontactus.

நடவடிக்கை தேவை: உங்கள் மாதாந்தர வழங்குதொகைகள் குறித்து முடிவெடுங்கள்

 

உங்கள் மாதாந்தர வழங்குதொகை குறித்து நீங்கள் எடுத்திருக்கும் தீர்மானம் எங்களிடம் தெரியப்படுத்தப்படவில்லை என்பதைக் கவனித்தோம். 

 

ஏற்கனவே தெரிவித்தபடி, உங்கள் மாதாந்தர வழங்குதொகைகள் உங்களது 65-வது பிறந்தநாள் மாதத்திலிருந்து தொடங்கி, உங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வழங்கப்படும். உங்களிடமுள்ள தெரிவுகள் பற்றிய மேல் விவரங்களுக்கு, அன்புகூர்ந்து cpf.gov.sg/reaching65 இணையத்தளத்தை நாடுங்கள். வரும் மாதங்களில் உங்கள் மத்திய சேமநிதி கணக்குகளுக்கு என்ன நடக்கும், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.   

 

உங்கள் வழங்குதொகைகள் தொடங்குவதற்கு முன்

வழங்குதொகைகள் தொடங்குவதற்கு 1 வாரத்திற்கு முன்

முழு ஓய்வுக்காலத் தொகையை எட்டுவதற்காக சாதாரணக் கணக்கிலுள்ள சேமிப்புகளை மாற்றுதல்

 

நாங்கள் உங்கள் சாதாரணக் கணக்கிலுள்ள சேமிப்புகளை, உங்கள் முழு ஓய்வுக்காலத் தொகை வரை, ஓய்வுக்காலக் கணக்குக்கு மாற்றுவோம். இது, நீங்கள் அதிக மாதாந்தர வழங்குதொகைகளைப் பெற உதவும். நீங்கள் உங்கள் முழு ஓய்வுக்காலத் தொகையை ரொக்கப்பணத்துடன் எட்டியிருந்தால், உங்களது சாதாரணக் கணக்கிலுள்ள சேமிப்புகளை நாங்கள் தானாகவே ஓய்வுக்காலக் கணக்குக்கு மாற்றமாட்டோம். ஆனால், அதிக மாதாந்தர வழங்குதொகைகளைப் பெற, அவ்வாறு செய்யும்படி எங்களிடம் நீங்கள் தெரியப்படுத்தலாம்.

 

உங்கள் ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து சந்தா கழித்தல்

 

உங்கள் மசேநி லைஃப் சந்தாவை உங்களது ஓய்வுக்காலக் கணக்கிலிருந்து கழிப்போம். உங்கள் சந்தா தொடர்ந்து வட்டி ஈட்டும். அந்த வட்டி, உங்கள் மாதாந்தர வழங்குதொகைகளில் சேர்த்துக் கொள்ளப்படும்.

என்ன செய்ய வேண்டும்

 

உங்களது உத்தேச வழங்குதொகைகளைப் பார்க்கவும், வழங்குதொகைகளைப் பெறுவதற்காக உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை உறுதிப்படுத்தவும், "எனது மாதாந்தர வழங்குதொகைகளைத் திட்டமிடுதல்” (“Plan my monthly payouts") எனும் எங்களது இணையவழிச் சேவையை (cpf.gov.sg/payout இணையத்தளத்தில்) இப்போதே பயன்படுத்துங்கள். இந்தச் சேவையைப் பயன்படுத்தி பின்வருபவற்றையும் நீங்கள் முடிவு செய்யலாம்:  

உங்கள் வழங்குதொகைகளை அதிகரியுங்கள்

உடனடித் தேவைகளுக்காகப் பணமெடுப்பதற்குப் பதிலாக, வழங்குதொகைகளுக்குக் கூடுதலான மசேநி சேமிப்புகளை ஒதுக்குவதன்மூலம் உங்களுக்குக் கிடைக்கும் மாதாந்தர வழங்குதொகைகளை அதிகரிக்க "எனது மாதாந்தர வழங்குதொகைகளைத் திட்டமிடுதல்” (“Plan my monthly payouts") சேவை (cpf.gov.sg/payout இணையத்தளத்தில்) துணை புரிகிறது.

 

உடனடித் தேவைகளுக்காக மசேநியிலிருந்து பணமெடுப்பது பற்றி மேலும் அறிய, cpf.gov.sg/withdrawalpage இணையத்தளத்தை நாடுங்கள். நீங்கள் உடனடியாகப் பணமெடுக்கத் தேவையில்லாத நிலையில், இணையம் வழியாக மத்திய சேமநிதியிலிருந்து பணமெடுப்பதை முடக்க விரும்பினால், மத்திய சேமநிதி பணமெடுப்புப் பூட்டை நீங்கள் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதை cpf.gov.sg/adjustlimitfaq இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் வழங்குதொகைகளை ஒத்திவையுங்கள் நீங்கள் 65 வயதை எட்டும்போது வழங்குதொகைகள் பெறுவதைத் தொடங்க விரும்பாவிட்டால், "எனது மாதாந்தர வழங்குதொகைகளைத் திட்டமிடுதல்” (“Plan my monthly payouts") சேவையைப் பயன்படுத்தி (cpf.gov.sg/payout இணையத்தளத்தில்), வழங்குதொகைகளைப் பின்னர் தொடங்குமாறு எங்களிடம் நீங்கள் தெரியப்படுத்தலாம். நீங்கள் ஒத்திவைக்கும் ஒவ்வோர் ஆண்டுக்கும் மாதாந்தர வழங்குதொகைகள் 7% வரை அதிகரிக்கும்.

நீங்கள் 65 வயதை எட்டுவதற்கு முந்திய மாதத்தின் 15-ஆம் தேதிக்குள், தயவுசெய்து "எனது மாதாந்தர வழங்குதொகைகளைத் திட்டமிடுதல்” (“Plan my monthly payouts") சேவை வழியாக (cpf.gov.sg/payout இணையத்தளத்தில்), உங்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யுங்கள். எடுத்துக்காட்டாக, உங்களது 65-வது பிறந்தநாள் மாதம் பிப்ரவரி என்றால், ஜனவரி 15-க்குள் விண்ணப்பியுங்கள்.

 

வழங்குதொகை குறித்த உங்கள் தீர்மானத்தை அண்மையில் எங்களிடம் நீங்கள் தெரியப்படுத்தி இருந்தால், தயவுசெய்து இந்த அறிவிப்பைப் பொருட்படுத்த வேண்டாம். 

 

உங்களுக்கு விளக்கம் தேவைப்பட்டால், தயவுசெய்து cpf.gov.sg/membercontactus இணையத்தளத்தை நாடுங்கள்.